அமைச்சர்கள் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் கூடியது. இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கும் போது துறை ரீதியாக என்னென்ன அறிவிப்புகள் வெளியிடுவது என்பது குறித்து விவாதிக்கப் பட்டது.
மேலும் பேரவை விதி எண்.110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகள் வெளியிடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. இதையடுத்து ஓரிருநாளில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடை பெறும் என்று தெரிகிறது.
அதில், சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, எந் தெந்த துறையை சார்ந்த மானிய கோரிக்கை விவாதத்தை எந்த நாளில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை அமைச்சர்கள் விமர்சிக்க வேண்டாம் என கேட்டு கொண்டு உள்ளார் மத்துய அரசுடன் மாநில அரசு இணக்கமான சூழல் உள்ளதால் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளார்.