இந்திய அணி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
ஐசிசி-யின் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் இந்திய அணி 5 புள்ளிகள் பெற்று 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
தென் ஆப்ரிக்க அணி (123) தொடர்ந்து முதலிடமும், ஆஸ்திரேலியா (118) 2-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி 117 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. நியூஸிலாந்து அணி 115 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து (109), இலங்கை (93), வங்கதேசம் (91), பாகிஸ்தான் (88), மேற்கிந்தியத் தீவுகள் (79), ஆப்கானிஸ்தான் (52), ஜிம்பாப்வே (46), அயர்லாந்து (43) ஆகிய அணிகள் முறையே 5 முதல் 12 இடங்களில் உள்ளன.