நகரங்களில் தூய்மை அதிகரிப்பு: ‘தூய்மை இந்தியா’ திட்டம் வெற்றி
மத்திய அரசின், ‘சுவச் பாரத்’ எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டின் பல பகுதிகள் துாய்மை அடைந்துள்ளதாக, மக்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளையும் துாய்மையானதாக மாற்ற, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, துாய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி, 500 நகரங்களில் உள்ள மக்களிடம், இத்திட்டத்தின் பயன் குறித்து கருத்துக் கேட்கப்பட்டது.
அதில், 434 நகரங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு முடிவுகள் வெளியாகியுள்ளன; இதில், 83 சதவீதம் பேர், அவர்கள் வசிக்கும் பகுதிகள், கடந்த ஆண்டை விட தற்போது துாய்மையானதாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ள நகரங்களின் ஆய்வு முடிவுகளும் வெளியான பின், துாய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய நகரங்களுக்கு, மத்திய அரசின் சார்பில் பரிசு வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது:நாட்டை துாய்மைபடுத்தும் நல்லெண்ணத்துடன், துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், அனைத்து நகரங்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது; இது, மக்கள் மனதில் மாற்றம் வந்துள்ளதை குறிக்கிறது. இத்திட்டத்தின் மூலம், நாடு துாய்மை அடைவது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.