‘பயங்கரவாதிகளால் எச்.ஐ.வி., பரவலா?’
தமிழகத்தில், மருத்துவ மாணவர்கள் என்ற பெயரில், இலவசமாக நீரிழிவு பரிசோதனை செய்வதாக கூறி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர், எச்.ஐ.வி., வைரஸ் தொற்றை, பொதுமக்களுக்கு பரப்பி வருகின்றனர். பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்ற தகவல், சமூக வலைதளங்களில், வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறுகையில், ”நீரிழிவு பரிசோதனைக்காக, மருத்துவ கல்லுாரி மாணவர்களை பயன்படுத்தவில்லை. இந்த தகவல் முற்றிலும் வதந்தி,” என்றார்.
மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க, திட்ட இயக்குனர் செந்தில் ராஜ் கூறுகையில், ”எச்.ஐ.வி., வைரஸ் தொற்று, ஊசி மூலம் பரவாது; அந்த வைரஸ், 10 வினாடிகளில் இறக்கக்கூடியது. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்,” என்றார்.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஐ.எஸ்., பயங்கரவாதிகள், எச்.ஐ.வி., வைரஸ் தொற்றை பரப்புவதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தகவல்களை, யாரும் பார்வர்டு செய்ய வேண்டாம்’ என்றனர்.