Breaking News
மும்பையுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் களமிறங்கும் பஞ்சாப்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆட்டத்தில் 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அதேவேளையில் பஞ்சாப் அணி 12 ஆட்டத்தில், 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உருவாகக்கூடும் என்ற நெருக்கடியுடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

பஞ்சாப் அணி தனது கடைசி ஆட்டத்தில், இருமுறை சாம்பிய னான கொல்கத்தாவை வீழ்த்தியிருந்தது.

அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏறக்குறைய ஹைதராபாத் அணி யிடமே உள்ளதாக கருதப்படுகிறது. 15 புள்ளிகளுடன் உள்ள ஹைதரா பாத் தனது கடைசி ஆட்டத்தில் குஜராத்துடன் 13-ம் தேதி மோது கிறது. இந்த ஆட்டத்தில் ஹைதரா பாத் தோல்வியடைந்தால் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றில் கால் பதிக்க பிரகாசமான வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இந்த சீசனில் 2 சதங்கள் அடித் துள்ள ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள ஹசிம் ஆம்லா நல்ல பார்மில் உள்ளார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், மார்ட்டின் கப்தில் ஆகியோரும் ஒருசேர ரன் குவிக்கும் பட்சத்தில் பெரிய அளவிலான இலக்கை கொடுக்கலாம்.

பந்து வீச்சில் சந்திப் சர்மா, மோஹித் சர்மா நேர்த்தியாக பந்து வீசி நெருக்கடி கொடுத்து வருகின்ற னர். அக் ஷர் படேல் ஆல்ரவுண்ட ராக சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார். இன்றைய ஆட்டத்தில் அவர் அசத்த தயாராக உள்ளார்.

மும்பை அணி தனது கடைசி ஆட்டத்தில் ஹைதராபாத்திடம் தோல்வியடைந்திருந்தது. இந்த சீசனில் வான்கடே மைதானம் மும்பை அணியின் கோட்டை யாகவே இருந்து வருகிறது. இங்கு அந்த அணி 6 ஆட்டத்தில் ஒரு தோல்வி மட்டுமே கண்டுள்ளது.

பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா, நித்திஷ் ராணா, பார்த்தீவ் படேல், பொலார்டு, சிம்மன்ஸ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இவர்கள் எந்தவித பந்து வீச்சையும் வெளுத்து வாங்கி ரன் குவிக்கும் திறன் உடையவர்களாக இருப்பது அணியின் பெரிய பலமாக உள்ளது.

சகோதரர்களான ஹர்திக் பாண் டியா, கிருனல் பாண்டியா ஆகி யோர் இந்த சீசன் முழுவதுமே அணியின் தேவையை உணர்ந்து ஆல்ரவுண்டர்களாக சிறந்த பங்க ளிப்பை வழங்கி வருகின்றனர். பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் தனது அனு பவத்தால் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவராக உள்ளார்.

17 விக்கெட்கள் வீழ்த்தி உள்ள நியூஸிலாந்தின் மெக்லீனகன், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் உதவியாக உள்ளனர். மலிங்காவும் பார்முக்கு திரும்பியிருப்பது பந்து வீச்சின் பலத்தை அதிகரித்துள்ளது.

இடம்: மும்பை

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.