எந்த பொருளுக்கு என்ன விலை? ஜிஎஸ்டி கவுன்சில் இன்று ஆலோசனை
ஜூலை முதல் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிமுறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஜிஎஸ்டி மசோதா சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜிஎஸ்டி.,யின் கீழ் எந்ததெந்த பொருளுக்கு என்னென்ன விலை நிர்ணயிக்கலாம் என முடிவு செய்வதற்காக காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள், நிதி ஆலோசகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகம் சார்பில் நிதியமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொள்ள உள்ளார்.
ஜிஎஸ்டி.,கீழ் செய்யப்பட உள்ள விலை நிர்ணயித்தால் மொபைல் போன் கட்டணம் உள்ளிட்டவைகளின் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பல முக்கிய பொருட்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.