தாக்குதலுக்கு தயாராகுங்க: விமான படை தளபதி கடிதம் ‘லீக்’
குறுகிய காலத்தில், தற்போதைய நிலையிலேயே தாக்குதல் நடத்த அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என விமான படை தளபதி கூறியுள்ளார்.இது தொடர்பாக விமான படை தளபதி தனோவா, கடந்த மார்ச்30ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த கடிதம் சுமார் 12 ஆயிரம் பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது.அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழ்நிலையில், தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. எனவே நாம் தற்போதைய நிலையிலேயே, குறுகிய காலத்தில் தாக்குதல் நடத்த தயாராக வேண்டும். இது குறித்த பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் சில பிரச்னைகள் காரணமாக விமான படைக்கு அவப்பெயர் ஏற்பட்டது. அதிகாரிகள் தேர்வு மற்றும் பதவி உயர்வுக்கு சலுகை காட்டியதற்காகவும் விமானப்படை விமர்சனத்திற்கு ஆளானது. இது மிகப்பெரிய இழுக்கு ஆகும். உடல் ரீதியாக துன்புறுத்துவது, தேவையற்ற வார்த்தைகளில் திட்டுவது, பாலியல் தொந்தரவு ஆகிய செயல்களை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.விமான படை தளபதி அச்சுறுத்தல் என குறிப்பிட்டுள்ளது, பாகிஸ்தானால் காஷ்மீரில் தூண்டப்படும் கலவரத்தையும், தற்போதைய நிலையிலேயே என்பது விமானபடையில் வீரர்கள் மற்றும் விமானங்கள் பற்றாக்குறை இருந்தாலும் நடவடிக்கை தயாராக வேண்டும் என கருதப்படுகிறது.இது குறித்து விமானப்படை அதிகாரியிடம்கேட்ட போது, விமானபடைக்குள் பரிமாறி கொள்ளப்படும் தகவல் மட்டும் என தெரிவித்துவிட்டு பதிலளிக்க மறுத்துவிட்டார்