அமெரிக்காவிடமிருந்து ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்தியா
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் கண்ணகாணிப்பை தீவிரப்படுத்தும் பொருட்டு, இந்தியா, அமெரிக்காவிடமிருந்து ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளது.
எல்லைப்பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்திவரும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை கண்டிக்கும் பொருட்டும், தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு பயங்கர விளைவை ஏற்படுத்தும் பொருட்டு, இந்தியா, அமெரிக்காவிடமிருந்து நவீன 64டி அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பீடு
ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், 39 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், வெளிநாடுகளிடமிருந்து அதிகவிலைமதிப்பில் ஆயுதம் மற்றும் தாக்குதல் வாகனங்கள் வாங்குவதில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.