ஜாகீர் நாயக்கிற்கு சவூதி குடியுரிமை
பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள இந்தியாவைச் சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக்கிற்கு சவூதி அரசு அந்நாட்டு குடியுரிமை வழங்கியுள்ளது.
இஸ்லாமிய மதபோதகரான ஜாகீர் நாயக், 51, வங்கதேசத்தில் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் ஜாகீர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டு இத்தாக்குதல் நடத்தியதாக கூறினான். எனவே இவரது பேச்சு பயங்கரவாதத்தை தூண்டுவதாக இருப்பாதக இந்தியா குற்றம்சாட்டி தேசிய புலனாய்வு எனப்படும் என்.ஐ.ஏ. அமைப்பு வழக்குப்பதிவு செய்தது. உரிய நேரத்தில் இந்தியா திரும்பாமல் அவர் இன்னும் சவுதியில் தங்கி வருகிறார்
இந்நிலையில் ஜாகீர்நாயக்கிற்கு சவூதி அரேபியா அரசு அந்நாட்டு குடியுரிமை வழங்கியுள்ளது.