100 சதவீத தேர்ச்சியில் தனியார் பள்ளிகள் முன்னிலை
பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளி கள் முன்னிலையில் உள்ளன; இரு மடங்கு அளவுக்கு, ௧௦௦ சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மாணவர்களின் மதிப்பெண் வகை, ‘சென்டம்’ பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் எண்ணிக்கை பட்டியலை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 12 ஆயிரத்து, 188 பள்ளிகளின் மாணவர்கள் தேர்வு எழுதினர். இவற்றில், 5,059 பள்ளிகளில் தேர்வு எழுதிய, அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள, 5,463 அரசு பள்ளிகளில், 1,557 பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இது, அரசு பள்ளிகளில், 28 சதவீதமாகும். தேர்வில் பங்கேற்ற, 6,725 தனியார் பள்ளிகளில், 3,502 பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அதாவது, 52 சதவீத, தனியார் பள்ளிகள் முழுமையான தேர்ச்சியை பெற்றுள்ளன.
அரசு பள்ளிகளை ஒப்பிடும் போது, இரு மடங்கு தனியார் பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பாடப்பிரிவு வாரியான தேர்ச்சி பட்டியலில், தமிழ் மற்றும் பிறமொழி பாடங்களில், 3.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. ஆங்கிலத்தில், 2.33; கணிதம், 3.43; அறிவியல், 0.49 மற்றும் சமூக அறிவியலில், 1.62 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை.
தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியலில், மாணவர்கள், 2.29; மாணவியர், ௦.௯௬ சதவீதமாகவும் உள்ளனர்.
கணிதத்தில் மாணவியர் தமிழில் மாணவர் ‘டல்’ : மாணவியரில், கணிதத்தில் அதிகபட்சமாக, 2.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. அறிவியலில், 99.74 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில், 4.69 சதவீதம் பேர் மொழி பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை; சமூக அறிவியலில், 97.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.