சுண்டைவற்றல்குழம்பு
என்னென்ன தேவை?
சுண்டை வற்றல் – ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 3
கடுகு – அரை ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
வெல்லத் தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்-சிறிதளவு
பெருங்காயத் தூள்-சிறிதளவு
புளி (கெட்டியாகக் கரைத்தது) – 2 கப்
கறிவேப்பிலை, உப்பு, நல்லெண்ணெய்
– தேவையான அளவு
எப்படிச் செய்வது?
எண்ணெயைக் காயவைத்து, கடுகைத் தாளித்துக் கொள்ளுங்கள். பிறகு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாயை நறுக்கிச் சேர்த்து வதக்குங்கள். சுண்டைவற்றலை அதனுடன் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லத் தூள் கலந்து கொதிக்கவிடுங்கள். குழம்பு நன்றாகக் கொதித்ததும், கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கினால், சுவையான சுண்டைவற்றல் குழம்பு தயார்.