ஊழல்வாதிகளிடம் கைப்பற்றப்பட்ட கறுப்புபணம் ஏழைகளிடம் வந்து சேரும் : மோடி
அசாம் மாநிலத்தில் நடந்த பா.ஜ., அரசின் 3 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், ஊழல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றப்படும் கறுப்பு பணம் ஏழைகளிடம் வந்து சேரும்.
ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நான் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதற்காக பயப்பட போவதில்லை. மக்களிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன். அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். இந்த ஆட்சியில் நேர்மையாக மக்கள் மகிழ்ச்சியாகவும், நலமுடனும் உள்ளனர். முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே கறுப்பு பணத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
எங்கள் அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் துணைநிற்கும் 125 கோடி இந்திய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. பண மதிப்பிழப்பு என்பது மிகவும் கடினமான முடிவு. இதனை காரணமாக வைத்து மக்களிடம் கோபத்தை தூண்டி, அரசுக்G எதிராக தூண்டி விட எதிர்க்கட்சி தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால் மக்களின் ஆசியால் எங்கள் அரசு அனைத்து பிரச்னைகளையும் சமாளித்தது. கடுமையான முடிவுகள் எடுத்தாலும் மக்களின் ஆதரவு பெருகியது. அதனால் இப்போது மக்கள் மாற்றத்தை காண்கிறார்கள். இவ்வாறு மோடி பொதுக் கூட்டத்தில் பேசினார்.