முக்கிய நகரங்களை தாக்க பயங்கரவாதிகள் சதி : உளவுத்துறை எச்சரிக்கை
டில்லி, மும்பை மெட்ரோ ரயில் நிலையங்கள், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் பயங்கர தாக்குதல் நடத்த லக்ஷர் இ தொய்பா அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக உளவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாகிஸ்தானைச் சேர்ந்த லக்ஷர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 21 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி உள்ளனர். இவர்கள் சிறு குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே உள்ளனர். இவர்கள் அனைவரும் பாக்., உளவுத்துறையால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ஓட்டல்கள், புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள், மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகள், வழிபாட்டு தலங்கள், டில்லியில் உள்ள மைதானங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பயங்கரவாத தடுப்பு குழுவினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தாக்குதல் நடத்த பாக்., பயங்கரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.