ஆதார் எண்ணை போனில் தெரிவிக்க வேண்டாம்: வங்கி கணக்கில் இருந்து நூதன திருட்டு
ஆதார் எண் விபரம் குறித்து போனில் யார் கேட்டாலும் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
வங்கிக் கணக்கிலுள்ள வாடிக் கையாளர்களின் பணத்தை திரு டும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு “ஸ்கிம்மர்” கருவி மூலம் வாடிக்கையாளர்களின் வங்கித் தகவல்களை திருடி போலி ஏடிஎம் கார்டுகளை தயார் செய்து கோடிக் கணக்கில் பணம் திருடப்பட்டது. இந்த மோசடி கும்பலை போலீ ஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, வாடிக்கையாளர் களின் பெயர், தொலைபேசி எண் களை தெரிந்து கொண்டு வங்கி யில் இருந்து மேலாளர் பேசுவதாக கூறி, ரகசிய பின் நம்பர் மற்றும் கார்டு எண்ணைப் பெற்று, பின் னர் போலி கார்டு தயாரித்து, வாடிக் கையாளர்களின் வங்கிக் கணக் கிலிருந்த பணத்தை திருடினர்.
அந்த வகையில் தற்போது மேலும் ஒரு மோசடி கும்பல் நூதன முறையில் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் முயற்சி யில் இறங்கியுள்ளதாக கூறப்படு கிறது. அதன்படி, வங்கி வாடிக் கையாளர்களுக்கு போன் செய் யும் நபர், “நான் வங்கி அதிகாரி பேசுகிறேன். உங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை நீங்கள் இதுவரை இணைக்க வில்லை. இன்றைக்குள் இணைக் காவிட்டால் உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்படும். எனவே, உங்களது ஆதார் எண்ணை தெரிவியுங்கள். நானே வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து விடுகிறேன்” என்று கூறுவார்.
தொடர்ந்து ‘செல்போனில் எண் 1-ஐ அழுத்தவும்’ என்பார். அழுத்தியவுடன் ‘ஆதார் எண்ணை பதிவு செய்யவும்’ என்று குறிப்பி டுவார். பிறகு ‘ஒரு OTP (ONE TIME PASS-WORD) உங்கள் மொபைலுக்கு வரும். அந்த எண் என்ன? ’ என்று கேட்பார். அந்த எண்ணை தெரிவித்தவுடன் சம்பந் தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடிவிடுவார். இந்த வகையான மோசடி தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, “இதுபோன்று வாடிக்கை யாளர்கள் சிலரை வங்கி அதிகாரி கள் பேசுவதாக கூறி ஒரு சிலர் தொடர்பு கொண்டதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. ஆனால், இதுவரை யாரும் ஏமாந்ததாக புகார் தெரிவிக்க வில்லை. வங்கியிலிருந்து யார் போனில் தகவல் கேட்டாலும் ஆதார் எண், டெபிட் மற்றும் கிரெ டிட் கார்டு குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்பது தான் எங்கள் அறிவுரை” என்றார்.