பிரிட்டன் பொதுத் தேர்தலுக்காக இந்து கோயிலுக்கு சென்று தெரசா மே வாக்கு சேகரிப்பு
பிரிட்டனில் வரும் 8-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே தனது கணவர் பிலிப்புடன் வடமேற்கு லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோயிலுக்குச் சென்று இந்துக் களிடம் வாக்கு சேகரித்தார்.
இதுகுறித்து கோயிலின் செய்தித் தொடர்பாளர் கூறும் போது, ‘‘பகவான் சுவாமி நாராயண் கோயிலில் தெரசா மே சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அப்போது மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார். கோயிலின் இளம் மற்றும் பழைய சேவார்த்திகளையும், பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்தார்’’ என்றார்.
பின்னர் கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் பேசிய தெரசா மே, ‘‘பிரிட்டனை உலகிலேயே சிறந்த நாடாக உருவாக்க எனக்கு உதவ வேண்டும். பிரிட்டனில் உள்ள இந்துக்களும், இந்தியர்களும் இதற்காக என்னுடன் ஒன்றிணைய வேண்டும். இந்தியாவுடனான முக்கிய தொடர்புகளைக் கட்ட மைத்துக் கொள்ளவும் பிரிட்டனில் உள்ள இந்தியர்கள் உதவ வேண்டும்’’ என்றார்.
பின்னர் கோயில் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங் கப்பட்டது. ஏற்கெனவே கடந்த 2013-ல் தெரசா மே சுவாமி நாரா யண் கோயிலுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.