தனிமைபடுத்தப்பட்ட கத்தார்; நான் தான் காரணம்: டிரம்ப் டிவிட்டரில் சர்ச்சை!!
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய நாடுகள், கத்தாருடனான ராஜாங்க உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளன.
கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், பயங்கரவாதத்துக்கான முடிவின் தொடக்கம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தனது டிவிட்டரில், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு நிதி உதவி தருவதை வளைகுடா நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினேன்.
இதை நான் கூறியபோது, தலைவர்கள் அனைவரும் கத்தாரை நோக்கி கையைக் காட்டினர். இதனால் தான் கத்தாரின் நிலைமை தற்போது இவ்வாறு உள்ளது என பதிவு செய்துள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கத்தாரை தனிமைப்படுத்த இஸ்ரேல் ஆதரவு அமைப்பு, சில அரபு நாடுகளுடன் கை கோர்த்த தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.