சிவில் படித்துவிட்டோம்!!! வேலை பெறுவது எப்படி???
ஹலோ சிவில் இன்ஜினியர் ப்ரஷேர்ஸ்! நம் அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற
ஆர்வத்தோடுதான் இருக்கிறோம்.அவ்வாறு என்னும் நாம் ஏன் ஒரு நிறுவனத்தின் எதிர்பார்பை
உணர்வதில்லை. இங்கு இதனை பற்றி நமக்கு புரியவைக்க யாருக்கும் நேரமும் இல்லை.
கட்டுமான நிறுவனத்தின் எதிர்பார்பு
கட்டுமான நிறுவனம் தனக்கு தேவையான சிறந்த அனுபவம் உள்ள
பொறியாளரை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகிறது. மேலும் ப்ரஷேர்ஸ் என்றால் ரெசும்
வாங்குவதும் இல்லை. அப்படியே வாங்கினாலும் வேலை கொடுப்பதில்லை, காரணம் என்ன???
நாங்கள் கட்டிட நிறுவனங்களை தொடர்பு கொண்டு பேசியபோது அவர்கள் கூறியதாவது,
“அனுபவம் உள்ள பொறியாளர்கள் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்க தயாராக உள்ள
நிலையில் நாங்கள் ஏன் அனுபவம் இல்லாத பொறியாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்”
அப்படியே வேலை கொடுத்து ட்ரைனிங் கொடுத்தாலும் ஆறுமாதம் அல்லது ஒரு வருடத்திற்கு
மேல் வேலை பார்பதில்லை.அதனால் அனுபவம் மிக்க பொறியாளர்களை தேர்வு செய்வதில்
ஆர்வம் காட்டுவதாகவும் மேலும் திறமை மிக்க ப்ரெஷர்க்கு வேலை கொடுக்க தயாராகவும்
இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
ப்ரஷேர்ஸ் எவ்வாறு திறமையை வளர்த்துகொள்வது
நாம் பயிலும் பொறியியல் வெறும் ஏட்டுகல்வியாக மட்டுமே உள்ள நிலையில் நம்மில் எத்தனை
பேர் புரிந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளோம்.நமது பிரச்சனை புரியாமல்
படித்ததுதான்,தற்பொழுது என்ன செய்வது வேலை பெற? Practical ட்ரைனிங் மூலம் நாம் நமது
அனுபவத்தை பெற இயலும்.தற்பொழுது சில தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற பயிற்சியினை
அளித்துவருகிறது.இதனை பயன்படுத்தி நமது அனுபவ அறிவினை வளர்த்துக்கொள்ள முடியும்.
தற்பொழுது வேலை வாய்ப்புகள் quantity survey-க்கு அதிகமாக உள்ளதும்
குறிப்பிடதக்கது.இது போன்ற பயிற்சிகளை பெறுவதன் மூலம் நாம் வேலை பெறுவது
எளிதாகிறது.
பயிற்சிகள் பற்றி அறிய
www.msnifce.org