நாகா பயங்கரவாத அமைப்பின் தலைவர் கெப்ளாங் காலமானார்
50 ஆண்டுகளாக இந்திய அரசால் தேடப்பட்டுவந்த நாகா பயங்கரவாத அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.கெப்ளாங்க்,77 உடல் நலகுறைவு காரணமாக மியான்மரில் இறந்தார்.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல் பிரதேசம்,மியான்மரின் ஒரு சில பகுதிகளை இணைத்து தனி நாடு கோரி வந்த நாகாலாந்து தேசிய சோஷியலிஸ் கவுன்சில் (என்.எஸ்.சி.என்) அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.கெப்ளாங்,77 இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளார். இந்திய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய பல்வேறு கிளர்ச்சி படைகளை உருவாக்கினார்.
இந்தியாவால் தேடப்பட்டு வந்த நிலையில் மியான்மர் நாட்டின் டாகா சாங்யாங்க என்ற பகுதியில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக நீரழிவு நோயால் அவதியுற்று வந்த கெப்ளாங் நேற்று இரவு இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.