இந்திய அளவில் டிரெண்டான கூவத்தூர் பேரம்
கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.6 கோடி தர சசிகலா குடும்பத்தினர் முன்வந்ததாக எம்.எல்.ஏ., கூறும் வீடியோ தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. இதனை தொடர்ந்து #MLAsForSale எனும் ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
ஜெ., மறைவுக்கு பின், பன்னீர் போர்க்கொடி தூக்கிய போது, எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர் பக்கம் செல்வதை தடுக்க, சசிகலா குடும்பத்தினர், எம்.எல்.ஏ.,க்களை, கூவத்துாரில் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். அங்கு அவர்களுக்கு 6 கோடி ரூபாய் தர, சசிகலா குடும்பத்தினர் முன் வந்ததாக, அ.தி.மு.க., – மதுரை வடக்கு, எம்.எல்.ஏ., சரவணன் கூறும், வீடியோ காட்சிகள், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, அது நாடு முழுவதும், பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்ட அந்த வீடியோ வைரலாக பரவியது. டுவிட்டரில் #MLAsForSale எனும் ஹேஷ்டாக்கில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.