நிலவிற்கே டெலிவரி : அமேசான் திட்டம்
சர்வதேச அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனம், வரும் 2020ம் ஆண்டிற்குள் நிலாவிற்கே பொருட்களை டெலிவரி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
2019ல், நிலவிற்கு நாசா மனிதர்களை அனுப்ப திட்டடமிட்டுள்ளது, 2018ல் ஸ்பேஸ்எக்ஸ், மனிதர்களை நிலவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதனிடையே, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பேஜோஸ், 2020ம் ஆண்டிற்குள் நிலாவிற்கு தங்கள் நிறுவனம் பொருட்களை டெலிவரி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெப் பேஜொஸ், புளூ ஆர்ஜின் என்ற நிறுவனத்தை கட்டமைக்க உள்ளதாகவும், இந்நிறுவனத்தின் மூலமே, நிலாவிற்கு கார்கோ டெலிவரி சேவையை வழங்க உள்ளதாக பெஜோஸ் கூறியுள்ளார்.