
தூத்துக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக் திருட்டு – அதிரடியாக மீட்ட தனிப்படை போலீசார்
தூத்துக்குடியில் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடியவரை கைது செய்து திருடப்பட்ட ரூபாய் 45,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது.
தூத்துக்குடி செயின்ட். ஜான் தெருவைச் சேர்ந்த அந்தோணி மகன் நல்லதம்பி (எ) ஞானபிரகாஷ் (53) என்பவர் கடந்த 04.02.2024 அன்று தனது வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.
இதுகுறித்து நல்லதம்பி (எ) ஞானபிரகாஷ் இன்று அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப மேற்பார்வையில், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி நடராஜன் நகரைச் சேர்ந்த மகாராஜன் மகன் அஜித்குமார் (27) என்பவர் மேற்படி நல்லதம்பி (எ) ஞானபிரகாஷின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது
இதனையடுத்து போலீசார் அஜித்குமாரை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 45,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட அஜித்குமார் மீது ஏற்கனவே தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் 5 திருட்டு வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என மொத்தம் 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.