நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி மத்திய அரசிடம் தர ரஜினிகாந்த் சம்மதம்
அறிவித்தபடி, நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, ஒரு கோடி ரூபாய் நிதி தாருங் கள்’ என, நடிகர் ரஜினியை சந்தித்த விவசாயிகள் வலியுறுத்தினர்.
சில ஆண்டுகளுக்கு முன், காவிரி பிரச்னைக் காக, சென்னையில், உண்ணாவிரதம் இருந்த நடிகர் ரஜினி, ‘நதிகள் இணைப்பு திட்டத்துக்கு, தன் பங்களிப்பாக, ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்’ என்றார். ஆனாலும், நதிகள் இணைப்பு திட்டத்தை, மத்திய அரசு இன்னும் செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், சென்னை,
போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில்,நேற்று அவரை சந்தித்துப் பேசினர்.
இது குறித்து, விவசாயிகள் சங்கத் தலைவர், அய்யாக்கண்ணு கூறியதாவது:
நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால் மட்டுமே, தமிழகத்தில், வரும் காலங்களில் சாகுபடி நடக்கும். எனவே, மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து, முதலில்,தென்மாநில நதிகளை இணைக்க வேண்டும்.
இது குறித்து, நாங்கள் முன்வைத்த கோரிக்கையை, மத்திய அரசு ஏற்கவில்லை. நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, நடிகர் ரஜினி ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறியிருந்தார். அவர் நிதியை வழங்கி, மத்திய அரசிடம்பேசினால், திட்டம் நிறைவேறும் என்று நம்புகிறோம்.
இதுதொடர்பாக, ரஜினியை சந்தித்து பேசினோம். என்னுடன் வந்த, 16 விவசாயிகளையும் வீட்டிற்கு அழைத்து, வரவேற்பு அறையில் அமர வைத்தார்; மோர் கொடுத்து உபசரித்தார். ‘வாக்குறுதி அளித்த
படி, நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, நிதி தர வேண்டும்’ என, ரஜினியி டம் கேட்டோம். உடனே, தன் உதவியாளரை அழைத்து, ஒரு கோடி ரூபாய் எடுத்து வரும்படி கூறினார்.
ஆனால், ‘பணத்தை நாங்கள் வாங்குவது சரியாக இருக்காது. மத்திய அரசிடம் நீங்களே கொடுங்கள்’ என, கூறிவிட்டோம். இது குறித்து, மத்திய அரசிடம் பேசுவதாக, ரஜினி உறுதி அளித்தார் என அய்யாக்கண்ணு கூறினார்.