திரிபுராவில் பெரிய தலையுடன் பிறந்து ஐந்தரை ஆண்டாக சிகிச்சை பெற்ற சிறுமி திடீர் மரணம்
ஹைட்ரோசெபாலஸ் (மூளையில் நீர்கோர்ப்பு) என்கிற குறை பாட்டால் 94 செ.மீ சுற்றளவு கொண்ட மிகப் பெரிய தலையுடன் பிறந்து உலக அளவில் கவனத்தை ஈர்த்த சிறுமி ரூனா பேகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
தற்போது ஐந்தரை வயதான ரூனாவுக்கு அடுத்த மாதம் மற்றொரு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தது. குர்கானைச் சேர்ந்த போர்டிஸ் மெமோரியல் ஆய்வு மருத்துவமனையில் கடந்த 2013 முதல் ரூனாவுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. தலையை இயல்பு அளவுக்கு கொண்டு வர இது வரை 8 அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. இதன் பலனாக தலையின் சுற்றளவு 94 செ.மீ இருந்து 58 செ.மீ.க்கு குறைந் திருந்தது.
மற்ற குழந்தைகளைப் போல் ரூனாவும் விரைவில் மாறிவிடுவார் என அவரது பெற்றோருக்கு டாக்டர்கள் உத்தரவாதம் அளித் திருந்தனர். இதனால் பூரணமாக குணமடைந்ததும் ரூனாவை பள்ளியில் சேர்த்துவிட தாய் பாத்திமாவும், கூலித் தொழிலாளி யான தந்தை அப்துல் ரஹ்மானும் கனவு கண்டிருந்தனர்.
ஆனால் அந்த கனவை தகர்த்து, ரூனா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென உயிரிழந்தார். ‘‘ரூனா சுவாசிக்க சற்று சிரமப் பட்டார். அதனால் மருத்துவ மனைக்கு தூக்கிச்செல்ல முயன்றோம். அதற்குள் அவர் இறந்துவிட்டாள்’’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார் பாத்திமா.
கடைசிகட்ட மருத்துவ பரி சோதனைக்கு ஒருமாதமே இருந்த நிலையில் ரூனாவின் ஒட்டுமொத்த குடும்பமும் மற்றொரு அற்புதம் நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தது. இந்தச் சூழலில் ரூனாவின் உயிர் பறிபோனது அந்த குடும்பத்தின் நம்பிக்கையை முற்றிலும் தகர்த்துவிட்டது.
உடைந்துபோன குரலில் பேசிய தந்தை ரஹ்மான், ‘‘பிறந்த போது ரூனாவின் நிலைமை மிக மோசமாகத்தான் இருந்தது. ஆனால் 5 அறுவை சிகிச்சை களுக்குப் பின், அவளது உடல் நிலை நன்கு தேறியது. 2-வது முறையாக மருத்துவமனைக்கு வந்தபோது கூட, கூடுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவளால் நடக்கவோ, சாப் பிடவோ, பேசவோ முடியவில்லை என்றாலும் தலை பருமன் கணிச மாக குறைந்திருந்தது.
நானும் பணிக்கு புறப்பட்டு வந்தேன். திடீரென இரவு 8 மணியளவில் ரூனாவின் உடல்நிலை மோச மடைந்திருப்பதாக மனைவியிடம் இருந்து போன் வந்தது. பதறி யடித்து வீட்டுக்கு ஓடினேன். ஆனால் அடுத்த சில நிமிடங் களுக்கெல்லாம் ரூனா உயிர் பிரி்ந்தது’’ என்றார்