ஜனாதிபதி தேர்தல்: 24 பேர் வேட்புமனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ., சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிட உள்ளார். அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளன.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேற்று(ஜூன்21) வரை 24 பேர் வேட்புமனு தா்ககல் செய்துள்ளனர். நேற்று, தர்மபுரியை சேர்ந்த அக்னி ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் பீஹார் மாநிலம், சரண் மாவட்டத்தை சேர்ந்த லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 24 பேரில் 8 பேரது வேட்புமனுக்கள், உரிய ஆவணங்கள் இணைக்கப்படாததால் தள்ளுபடி செய்யப்பட்டன.