நீட் தேர்வு முடிவுகள் வெளியானது
மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்பட்ட நீட் நுழைவு தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
அனுமதி:
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, இந்த ஆண்டு அனைத்து மாநிலங்களிலும், ‘நீட்’ நுழைவு தேர்வு கட்டாயமாகி உள்ளது. மே, 7ல் நடந்த இந்த தேர்வை, 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான கட்டுப்பாடுகள், வினாத்தாள் வடிவமைப்பு குறித்து, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகின. தொடர்ந்து, தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. அதனால், ‘நீட்’ தேர்வு முடிவுக்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ., தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, உத்தரவிட்டது.
வெளியீடு:
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் சி.பி.எஸ்.இ., இணையதளத்தில்(http://cbseresults.nic.in/neet17rpx/neetJ17.htm) வெளியிடப்பட்டன. இதில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.