மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ஐ.ஐ.டி. புதுமுயற்சி..
ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் பயிலும் மாணவர்கள், அதிக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு கூட துணிந்துவிடுகின்றனர்.
அம்மாணவர்களை காக்கும் பொருட்டு, மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கோரக்பூர் ஐ.ஐ.டி. ஹாஸ்டலில், தினமும் மாலை 1 மணி நேரம் “விளக்கை அணைக்கும்” ( lights off) நிகழ்வு நடைபெறுகிறது. விளக்குகள் அணைந்தவுடன் மாணவர்கள் தாங்கள் இருக்கும் அறையில் இருந்து வெளியேறி மற்ற மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது. அவர்கள் மற்றவர்களுடன் மனம்விட்டு பேச முடிகிறது. இதனால் அவர்களது மனிறுக்கம் குறைவதாக நம்பப்படுகிறது.
மன இறுக்கம் காரணமாக, ஒரு மாணவி உட்பட 3 பேர், ஐ.ஐ.டி. கோரக்பூரில் சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சிறுமுயற்சி பலனளிக்கும்பட்சத்தில் இளைய தலைமுறையினரை, மனஅழுத்தம், மன இறுக்கம் போன்றவைகளிடமிருந்து காத்து அவர்களின் துணையுடன் வளமான இந்தியாவை உருவாக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று மார்தட்டிக்கொள்ளலாம்!!!!!