பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் பலி
பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 4 போலீஸ் அதிகாரி கள் உட்பட 11 பேர் கொல்லப் பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் காலிஸ்தான் சாலை யில் உள்ள மண்டல காவல் துறை தலைவரான எக்சன் மெஹபூப் அலுவலகம் அருகே நேற்று இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தத் தாக்குதலில் அங்கிருந்த ஏராளமான கார்கள் சேதமடைந்தன. சாலைகள் முழு வதும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன.
இதுபற்றி காவல் துறை துணைத் தலைவர் அப்துல் ரசாக் சீமா கூறும்போது, ‘வெடிகுண்டு தாக்குதல் நடப்பதற்கு முன்பாக ஷுகாதா சவுக் பகுதியில் வேக மாக வந்த காரை பாதுகாப்புப் படையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் சென்றுவிட்டது. இதன்பிறகுதான் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது. இருந்தாலும் அந்தக் கார் மூலம் இந்தக் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது உறுதியாகத் தெரியவில்லை’ என்றார்.
வெடிகுண்டு தாக்குதலில் 4 போலீஸ் அதிகாரிகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 9 பாதுகாப்புப் படை அதிகாரிகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.