மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
நாசாவின் கெப்லர் விண்கலம் 219 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. அதில் 10 கிரகங்களில் மனிதர்கள் வாழலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்து வருதற்கான ஆதாரங்களை நாசா விரைவில் வெளியிட இருப்பதாக வீடியோ செய்தி வெளியாகியுள்ளது. தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள விரும்பாத சிலர் ஹாக்டிவிஸ்ட் என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளனர்.அதில் கடைசியாக நடைபெற்ற நாசா விஞ்ஞானிகள் கூட்டத்தில் நாசா தலைவர் தாமஸ் சுர்புச்சென் பிரபஞ்சத்தில் வேற்று கிரகவாசிகள் வாழ்ந்து வருவதற்கான தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட நேரம் நெருங்கிவிட்டது என்று சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தாமஸ் சுர்புச்சென் தனது டுவிட்டர் பதிவில் நாசாவின்கெப்லர் விண்கலம் 219 புதிய கிரகங்களைக் கண்டு பிடித்துள்ளதையும், இவற்றில் 10 கிரகங்களில் மனிதர்கள்வாழ்வதற்கான சாதகமான சூழல் நிலவுவுவதாகவும், பூமியில் மனிதர்கள் தனிமையில் இருக்கிறார்களா? என்று சூசகமாக கேள்வி எழுப்பி இருந்தார்.இந்நிலையில், வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்துவருவதற்கான ஆதாரங்களை நாசா வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.