வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
தென்மேற்கு பருவமழை டில்லியை இவ்வாரத்தில் தாக்கும். இதனால் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் மாதம் ஆரம்பத்தில் தொடங்கியது. ஆனால், இன்று வரை வழக்கமான மழையை விட 1 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது.
மழை அதிகரிக்கும்
வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என்று கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்இன்னும் மூன்று நான்கு நாட்களில் பருவமழை டில்லியை தாக்கும் என கூறியுள்ளது. அப்போது மிகமிக அதிக அளவில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.மேலும், குறிப்பாக கோங்கன் மற்றும் கோவாவில் அதிக மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. டில்லியை தாக்கும் அதே நேரத்தில் குஜராத், மத்திய பிரதேசம் மாநிலத்திலும் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
கடற்கரை பகுதியான கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், குஜராத் பகுதிகள் மற்றும் கேரளாவில் நாளை(ஜூன்-27) அளவிற்கு அதிகமாக மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.அத்துடன் விதர்பா, மத்திய பிரதேசம், வடக்கு பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காள மலைப்பகுதிகள், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், அசாம், மேகலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவிலும் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.