மீண்டும் ‘வான்னாகிரை’ வைரஸ்: ஐரோப்பிய நாடுகள் பாதிப்பு
உலகை அச்சுறுத்திய ‘வான்னாகிரை’ கம்ப்யூட்டர் வைரஸ் போல, மீண்டும் ஐரோப்பிய நாடுகளை தாக்கியுள்ளது.
கடந்த மே மாதம் கம்ப்யூட்டர் உலகத்தை ‘ரான்சம்வேர்’ என்ற வைரஸ் அச்சுறுத்தியது. ‘வான்னாக்ரை'(அழ விருப்பமா) என்ற பெயரில் ‘ஹேக்கர்’கள் வைரசை பரப்பினர். இதனால், 150 நாடுகளில் ‘விண்டோஸ் எக்ஸ்.பி’ இயங்குதளத்தில் செயல்படும் 2,30,000 கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன.
‘ரான்சம்வேர்’ வைரஸ் என்பது நம்மிடம் பணத்தையோ பிற தகவல்களையோ பறிப்பதற்காக உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் நச்சு நிரல். இந்த வைரஸ் கணினியை தாக்கினால், அதில் உள்ள முக்கியமான டேட்டாக்கள் அனைத்தும் முடக்கப்படும். அதன்பின் ‘பிட்காய்’ எனும் சட்டவிரோத வழியில் அவர்கள் கேட்கும் பணத்தை செலுத்தவேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அன்லாக் செய்வதற்கான கீ தரப்படும். பணம் தராவிட்டால் நம்மிடம் உள்ள கோப்புகளை அழித்துவிடவோ, ரகசியக் குறியீட்டுக்கு மாற்றிவிடவோ செய்யும். கம்ப்யூட்டர்களை திடீரென அணைக்கவும் ‘ரான்சம்வேரால்’ முடியும்.