சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு 45% குறைந்தது
சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.
கருப்பு பணம் பதுக்கலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சுவிஸ் வங்கிகளில் பதுக்கும் இந்தியர்களின் பண விவரங்களை அளிக்க, சமீபத்தில் சுவிஸ் வங்கி ஒத்துக்கொண்டது. இந்நிலையில் தங்கள் நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பண விவரங்களை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: 2016ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியர்களின் பணம் சுமார் 4,500 கோடி ரூபாய் சுவிஸ் வங்கிகளில் உள்ளது. இதுவரை சுவிஸ் வங்கிகளில் இருந்த இந்தியர்களின் மொத்த பணத்தில், இதுவே குறைவு. அதிகபட்சமாக, கடந்த 2006ம் ஆண்டு, இந்தியர்கள் ரூ.23 ஆயிரம் கோடி பணத்தை டிபாசிட் செய்திருந்தனர். 2016ம் ஆண்டில் சுமார் 45% பணத்தை இந்தியர்கள் எடுத்துவிட்டனர்.
2006, 2011, 2013 ஆண்டுகளில் இந்தியர்களின் சுவிஸ் வங்கிகளின் டெபாசிட் அதிகமாக இருந்தது. மற்ற ஆண்டுகளில் இந்தியர்களின் டெபாசிட் குறைவாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.