மார்ச் இறுதிக்குள் சந்திரயான் 2 விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
2018ம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் சந்திராயன் 2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறியுள்ளார்.
ஈரோடு – சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய கிரண்குமார், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சந்திராயன் 1000 நாட்களை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பொறியியல் துறையைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் இணைந்து செயல்பட்டால் நம் நாட்டில் தொழில்நுட்பம் வளரும் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சந்திராயன் 2 வரும் 2018ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் விண்வெளியில் ஏவப்படும் .தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயற்கைகோள் தயாரிக்க இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது. விண்வெளியில் நிரந்தர ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.