கிராமங்கள் தத்தெடுப்பில் ஹாட்ரிக் அடித்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, தனது வாரணாசி தொகுதியில் உள்ள காக்ராஹியா தொகுதியை இம்முறை தத்தெடுத்துள்ளார். இதன்மூலம், பிரதமர் மோடி தத்தெடுத்துள்ள கிராமங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் லோக்சபா தொகுதியான வாரணாசியில் உள்ள காக்ராஹியா கிராமத்திற்கு வருகைதந்தார். அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் யோகி கூறியதாவது, பிரதமர் மோடி, தனது பதவிக்காலத்தில் மூன்றாவது முறையாக காக்ராஹியா கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இதன்மூலம், இந்த கிராமம் அபரிமித வளர்ச்சி பெறும் என்று கூறினார். இந்த கிராமத்தை தத்தெடுத்த பிரதமர் மோடிக்கு, இக்கிராம மக்களின் சார்பாக உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
காக்ராஹியா கிராமம், மல்யுத்த வீரர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், இதற்கு மல்யுத்த வீரர்களின் கிராமம் என்ற பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, இதற்குமுன் ஜெயபூர் மற்றும் நாக்பூர் உள்ளிட்ட கிராமங்களை தத்து எடுத்து அங்கு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.