பொருட்களின் எம்.ஆர்.பி.,: அரசு விளக்கம்
ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ள நிலையில், பொருட்களுக்கான, எம்.ஆர்.பி., எனப்படும், அதிகபட்ச விற்பனை விலை குறித்து, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: ஜி.எஸ்.டி., அமலுக்கு முன் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்களில், பழைய எம்.ஆர்.பி., விலை இருக்கும். அதற்கு அருகிலேயே, புதிய வரி விகிதத்துடன் கூடிய, எம்.ஆர்.பி., இருக்க வேண்டும்; இதை தனி, ‘ஸ்டிக்கர்’ அடித்து ஒட்ட வேண்டும். வரும், செப்., 30 வரை இதை பயன்படுத்தலாம். வரும், அக்., 1 முதல், புதிய, எம்.ஆர்.பி., மட்டுமே இடம்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.