Breaking News
முதல்வர் அறை புதுப்பிப்பு

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலை யொட்டி வாக்கு பதிவு நடைபெறவில்லை. ஆனால் பணபட்டுவாடா மட்டும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த ரேசில் முதலிடத்தை பெறுபவர் டி.டி.வி.தினகரன். இரண்டாம் இடத்தை மருது ராஜும், மதுசூதனன் ஆகியோர் உள்ளனர், இப்போதே தினகரன் தரப்பில் இருந்து ஃபிரிட்ஜ், எல்.இ.டி.டி.வி, இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளாக போலீஸ் உதவியோடு சாக்குபையில் இருந்து பறக்கிறது. இதை கண்ட தி.மு.க, ஓ.பி.எஸ். ஆதரவு வேட்பாளர் மற்றும் உதிரிகட்சி வேட்பாளர்கள் வயிற்றில் புளியை கரைக்கிரதாம். என்ன செய்வது டி.டி.வி.தினகரன்
தரப்பில் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் ஏதேனும் உள்ளதா என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தன்னுடைய வெற்றி உறுதி என தொப்பியை தாண்டி சத்தியம் செய்யாதகுறையக சொல்லும் டி.டி.வி.தினகரன் முதல்வர் அறை எப்படி இருக்க வேண்டும் என்று பொது பணித்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாரம்.

சசிகலா பெங்களூர் ஜெயிலில் இருந்து தன்னை சந்திக்க வந்த டி.டி.வி.தினகரன் மனைவி அனுராத தினகரனிடம் என்ன உன் புருஷன் எனது படமோ பெயரோ போடாமல் ஓட்டு கேட்கிறானாமே என வருத்தப்பட்டாரம். அனுராதாதினகரனோ சசிகலாவிடம் எல்லாம் காரியமாகத்தான் உங்கள் படமோ பெயரை போட்டால் வாக்கு வங்கி பாதிக்கும் அதனால் தான் இந்த ஏற்பாடாம் என்று சமாளித்தாரம். வேட்பாளர் தினகரனை சந்தித்த சென்னை மாநகர உளவுபிரிவு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஜெயம் உங்களுக்கு தான் எல்லா ஏற்பாடும் ரெடி கவலையே வேண்டாம் என கூறினாரம். இந்த நேரத்திலாவது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவி தனக்கு கிடைக்கும் என சைலேந்திர பாபு நினைத்தார் ஆனால் கிடைக்காமல் போகவே திறமைக்கு என்றைக்குமே மரியாதை இருக்காது என வருத்தப்பட்டாராம்.. வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்தவர் செந்தாமரை கண்ணான், காஞ்சிபுர போலீஸ் சூப்பிரடெண்டாக இருந்தவர் முத்தரசி இருவருமே காத்திருப்பவர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்
கூவத்தூர் விவகாரத்தில் இவர்களது தலை உருட்டப்பட்டாலும் நீதி மன்ற உத்தரவுபடி தான் செயல்பட்டனர். நீதிமன்ற உத்தரவு படி செயல்பட்ட தனக்கு இந்த நிலையா என செய்தியாளர்களிடன் புலம்பிவருகின்றனர். நியாயபடி பார்த்தால் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. திரிப்பாதி தான் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்களை பலிகடா ஆக்கியது நியாமா என உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் கேள்வி எழுப்புகின்றனர். இந்து அறநிலைதுறை அமைச்சராக இருப்பவர் சேவூர். ராமசந்திரன் இவர் தற்போது பலத்தசர்சையில் சிக்கியுள்ளார். இவர் திருத்தனி முருகன் கோவில் தக்கார் ஜெயசங்கரின் சொந்த ஊரான ஆர்காடு குப்பம் என்ற கிராமத்தில் பிரம்மாண்ட திருமண மண்டபம்
கட்டப்பட்டு வருகிறது. இதை அமைச்சரின் உறவினரே முறைக்கேடாக டெண்டர் எடுத்து அமைச்சர் பெயரை தவறாகபயன் படுத்தி தரமற்ற முறையில் கட்டிவருகிராராம். இந்தபிரச்சனையை கையில் எடுத்த எதிர் கட்சியினர் மிக பெரிய போராட்டம் நடத்த உள்ளனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி இவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து கட்சியினரிடம் வலுத்து வருகின்றது. காரணம் இவரது உறவினர் திருவள்ளுவர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரக பாலு என்பவர் பணியாற்றி வருகின்றார் . இவர் கலெக்டர் சுந்தரவள்ளி எனது நெருங்கிய உறவினர் என்று கூறி அப்பகுதியில் திருட்டு மணல் ஏற்றி வரும் லாரிகளை மடக்கி 10,000 முதல் 20,000 வரை வசூல் செய்கிறாரம். மேலும் காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்தை அமோக மாக நடத்தி வருகிறாரம். இவரை கட்டுபடுத்திட வேண்டிய கலெக்டரே இன்ஸ்பெக்டரை வளர்த்து வருகிறாரம். மேலும் மாவட்ட நிர்வாகமே கலெக்டரின் கட்டுபாட்டில் இல்லையென அதிகாரிகள் புலம்புகின்றனர். இதே மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரடெண்ட்டாக இருப்பவர் சாம்சங் இந்த மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு நிலைமை கேள்விகுறியாக உள்ளது. கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால் பொது மக்கள் முதலில் தொடர்புக் கொள்ளுவது போலீஸ் கன்ட்ரோல் ரூம் தொலைபேசிக்கு. ஆனல் இந்த மாவட்டத்திற்கு போலீஸ் கன்ட்ரோல் ரூம் தொலைபேசி நம்பரே கிடையாது. இப்படி இருக்கையில் சாம்சங் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எப்படி கட்டுப்படுத்துவார். டி.பி.எஸ் ஆக உள்ள இவரை எப்படி ஐ.பி.எஸ்க்கு தேர்வு செய்வார்களோ என்று தெரியவில்லை

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.