Breaking News
லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை ‘கேட்’ மீது ஏற முயன்ற பெண் கைது

அரண்மனை உச்சக்கட்ட பாதுகாப்பு மிகுந்த பகுதியில் உள்ளது. ஆனாலும் அவ்வப்போது பாதுகாப்பு படையினரின் பார்வைக்கு தப்பி சிலர் அந்த பகுதியில் நுழைந்து அசம்பாவித சம்பவங்களை நடத்த முயன்றுள்ள சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறி உள்ளன.

இந்த நிலையில், சுமார் 30 வயதுள்ள ஒரு பெண், நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிற்கதவின் (‘கேட்’) மீது ஏற முயற்சித்தார். நல்ல வேளையாக அவர் அரண்மனைக்குள் குதிப்பதற்கு முன்பாக போலீசார் பார்த்து விட்டனர். உடனடியாக அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

அவர் மத்திய லண்டன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் இந்த சம்பவம், பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என்று போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் கூட, ஒருவர் வாளுடன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் நின்றபோது, அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவர்களில் 3 பேர் காயம் அடைந்தனர். அந்த நபர் மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.