Breaking News
அமித்ஷா சென்னை வருகை ரத்து

பா.ஜ., தலைவர் அமித்ஷாவின் சென்னை, வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. அவர், மும்பையில் இருந்து டில்லி கிளம்பி சென்றார்.அ.தி.மு.க., – பா.ஜ., இடையே, பல கட்டமாக ரகசிய கூட்டணி பேச்சு நடந்தது. தொடர்ந்து, தமிழக பா.ஜ., பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான, பியுஷ் கோயல், 14ம் தேதி இரவு, சென்னை வந்தார்; அப்போது, தமிழக அமைச்சர்களை சந்தித்து பேசினர். அப்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து பா.ஜ., தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஆகியோர் சென்னை வர திட்டமிடப்பட்டது.

அப்போது, முதல்வர், துணை முதல்வரை சந்தித்து அதிமுக கூட்டணியை உறுதிபடுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அமித்ஷாவின் சென்னை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து அவர் டில்லி கிளம்பி சென்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.