Breaking News
ஜூலிக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம்: பிரபல நடிகை டுவீட்!

நடிகர் கமல் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி கலந்து கொண்டார். இதில் தொடக்கத்தில் ஜூலிக்கு இருந்த ஆதரவு தற்போது இல்லை.

இந்நிலையில் ஜூலியின் நடவடிக்கைகளில் வரவர அதிருப்தியடைந்து வரும் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நேற்று ஜூலி மீது மீண்டும் பயங்கர கோபம் ஏற்பட்டது.

நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு புரோ கபடி போட்டியில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியினர் விருந்தினர்களாக வந்திருந்தனர். அப்போது அவர்களை பார்க்க ஜூலி அவசரமாக ஓட முயன்றபோது கீழே விழுந்தார். இதில் அவரது வயிற்றில் கடுமையாக அடிபட்டது.

இதனால் ஜூலி ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் கதறி அழுதார். ஆனால் காயத்ரி, நமிதா போன்றோர் ஜூலி நடிப்பதாக கூறி திட்டினர். முன்னதாக விருந்தினர் முன்னிலையிலும் ஜூலி நமிதாவால் அவமானப்படுத்தப்பட்டார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.