Breaking News
ராமர் பாலம் காலம்காலமாக நம்பிவரும் எங்கள் நிலைபாட்டை உறுதி செய்துள்ளது

ராமர் சேது பாலம் குறித்த அமெரிக்க அறிவியல் டி.வி.சானல் ஆய்வு பா.ஜ. நிலைப்பாட்டினை உறுதிப்படுத்துவதாக உள்ளது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.

இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியை சரக்கு கப்பல் போக்குவரத்துக்காக ஆழப்படுத்த சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டது. ராமர் பாலம் வரலாற்று உண்மை இதை இடித்துவிட்டு கால்வாய் கட்டுவதற்கு பா.ஜ. போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவின் அறிவியல் சானல், ராமர் பாலம் தொடர்பாக, ஆவணப்படம் வெளியிட்டுள்ளது. சுமார் இரண்டரை நிமிடங்கள் உள்ள அதில் ராமர் பாலம் , இயற்கையாக உருவானது அல்ல என்றும், மனிதர்களால் கட்டப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் புகைப்படங்களை உள்ளிட்டவற்றை ஆதாரங்களாக கொண்டு இந்த முடிவு வெளியிடப்படுவதாக கூறியுள்ளது. கற்கள் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்றும், அதனை மூடியிருக்கும் மணல் படிமங்கள், 4 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் கூறியது, ராமர் பாலம் இயற்கையாக தோன்றிய அமைப்பு அல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்டது. இது காலகாலமாக நம்பிவரும் எங்கள் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.