Breaking News
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவர் பதவி விலகுகிறார்

அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிர்வாக பணியாளர்களின் தலைவராக இருந்து வருபவர் ஜான் கெல்லி. அவர் இந்த மாதத்தின் இறுதியில் பதவி விலகுகிறார்.

முன்னாள் கடற்படை அதிகாரியான 68 வயது, ஜான் கெல்லிக்கும், ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அவர் பதவி விலகுவதற்கும் அழுத்தங்கள் வந்ததாக தகவல்கள் கூறின.

இந்த நிலையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

இதை ஜனாதிபதி டிரம்ப், நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் மத்தியில் உறுதி செய்தார். அப்போது அவர் கூறும்போது, “ஜான் கெல்லி விடைபெறுகிறார். அவர் ஓய்வு பெறுகிறாரா என எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவர் மகத்தான பணியாளர். ஆண்டின் இறுதியில் அவர் வெளியேறுகிறார்” என குறிப்பிட்டார்.

மேலும், “ அவரது இடத்துக்கு வரப்போவது யார் என்பது அடுத்த ஒன்றிரண்டு நாளில் அறிவிக்கப்படும். அவர் என்னோடு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இருந்துள்ளார்” என்றும் டிரம்ப் கூறினார்.

அமெரிக்க மூத்த பத்திரிகையாளர் பாப் உட்வேர்ட் தனது ‘பீயர்’ என்ற புத்தகத்தில் “டிரம்ப் முட்டாள்” என ஜான் கெல்லி கூறியதாக குறிப்பிட்டு இருப்பதும், ஆனால் அதை ஜான் கெல்லி மறுத்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.