மக்கள் நலனுக்காக செயல்படுவதில் திமுகவுக்கு முதலிடம்: மு.க.ஸ்டாலின்

0

மக்கள் நலனுக்காக செயல்படுவதில் சட்டப்பேரவையில் திமுகவுக்கு தான் முதலிடம் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பணிகளை உணர்ந்து கடமையை திமுக நிறைவேற்றி உள்ளது என்றும் சட்டப்பேரவையில் எண்ணிக்கையிலும் முதலிடம் பெறும் காலம் விரைந்து வருகிறது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

குற்றவாளிகளுக்கு ஆராதனை
குற்றவாளிகளை ஆதாரனை செய்வதில் ஆளுங்கட்சியினர் ஆனந்தம் கொள்கின்றனர் என்றும் சட்டப்பேரவை மாண்புகளை அதிமுக மதிப்பதில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். நடந்து முடிந்த பேரவை கூட்டத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாட்டுக்கு ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

கடனை அதிகரித்த அதிமுக அரசு
அதிமுக அரசின் நிவாக சீர்கேடுகளால் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் நேரடி கடன் சுமை ஏறியுள்ளது என்றும் தமிழக அரசின் கடன் தொகை தற்போது ரூ. 3.14 கோடி என்ற மோசமான நிலையில் உள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தமிழரின் தலையிலும் ரூ. 36 ஆயிரம் கடனை அதிமுக அரசு சுமத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை பேரவையில் திமுக கூறியபோது ஆட்சியாளர்கள் பதில் தரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.