Breaking News
டெல்லி மெட்ரோ ரெயில் நிலைய டி.வி.யில் ஆபாச படம் ஒளிபரப்பு: பயணிகள் அதிர்ச்சி

டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் ராஜீவ் சவுக் மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி ராஜீவ் சவுக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள பெரிய டி.வி. திரையில் (எல்.இ.டி) 30 வினாடி நேரம் ஓடுகிற ஆபாச படம் காட்டப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ந்துபோன பயணிகளில் சிலர், தங்கள் செல்போனில் படம் பிடித்து, அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். அது வைரலாக பரவி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி டெல்லி மெட்ரோ ரெயில்நிலைய நிர்வாகம் கூறும்போது, “ஆபாச படம் காட்டப்பட்ட விவகாரம் எங்களுக்கு தெரியாது. எல்.இ.டி. திரைகளை நிறுவி, அவற்றில் படம் காட்டுவதெல்லாம் தனியார் ஒப்பந்தக்காரர் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. இப்போதுதான் அந்தப் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பணி இன்னும் முடிவு அடையவில்லை” என கூறியது.

இருப்பினும் இந்த விவகாரம் பற்றி டெல்லி மெட்ரோ ரெயில் கழகம் விசாரணை நடத்துகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.