என் குணம் அறிவாயோ?
உள்ளம் பெரிதுமில்லை ஆனாலும்
என் உள்ளமோ கள்ளமில்லை
நிறமோ வெள்ளையுமில்லை ஆனால்
என் குணமோ பொறுமையின் எல்லை
தெரிந்ததோ பல வார்த்தைகளில்லை
பேசுவதோ சில வார்த்தையிலில்லை
தத்தித்தத்தி நடந்து வருவேனே
என் தத்தை மொழியால் கவர்ந்திழுப்பேனே
சிரிப்பது என் குணங்களிலொன்று
பிறரை சிரிக்க வைப்பது தான்
என் புன்னைகையின் பங்கு….