Breaking News
வெங்காயமும், வெள்ளைப் பூண்டும்… டிவிகளில் களை கட்டும் சித்த மருத்துவம்

சாதாரண தலைவலி என்று டாக்டரிடம் போனால் கூட ஆயிரக்கணக்கில் அழ வேண்டியிருக்கிறது. வீட்டில் பாட்டி இருந்தால் நொச்சி இலையை போட்டு கொதிக்க வச்சு ஆவி பிடிச்சா எப்பேர்பட்ட தலைவலியும் காணாம போயிரும் என்று ஐடியா சொல்லி பணத்தை பாதுகாத்து விடுவார். இன்றைக்கு வயதானவர்களுடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக இருப்பது அரிதாகி வருவதால், சித்த மருத்துவ வேலைகளை சில டிவி சேனல்கள் செய்து வருகின்றன. சன்டிவி, ஜீ தமிழ், வேந்தர் டிவி என பல சேனல்களும் காலை நேரங்களில் ஏதாவது ஒரு மூலிகையை கசக்கி, பிழிந்து கசாயம் வைக்க கற்றுக்கொடுக்கின்றன. பல்வலியோ, வயிற்று வலியோ வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி குணப்படுத்தலாம் என்று எளிதாக கற்றுக்கொடுப்பதால் இந்த நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் என பல பெயர்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சித்த மருத்துவம்தான் நிகழ்ச்சிக்கான கரு. சித்த மருத்துவர் சொல்லச்சொல்ல மூலிகை இலைகளை உடனுக்குடன் இடித்து சாறு பிழிந்து அதை காய்ச்சி கசாயம் தயாரிக்கும் அழகே தனிதான்.

பாரம்பரி மருத்துவம் உணவே மருந்து ,மருந்தே உணவு என்னும் பழமொழிக்கேற்ப இந்நிகழ்ச்சியில் நமக்கு உண்டாகும் நோய்களை இயற்கையான முறையில் நாம் அன்றாட உண்ணும் உணவின் மூலம் எவ்வாறு குணப்படுத்துவது என்று விளக்கப்படுகிறது.

பயனுள்ள குறிப்புகள் எளிய முறையில் அனைவரும் நலமான வாழ்க்கை வாழ இந்நிகழ்ச்சியில் பல பயனுள்ள குறிப்புகள் வழங்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 500 எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பானது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.