கொச்சி, திருவனந்தபுர ஏர்போர்ட் இணையதளங்களை ஹேக் செய்த பாக். கும்பல்
கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களின் இணையதளங்களை பாகிஸ்தானிய ஹேக்கர்கள் ஹேக் செய்தனர்.
கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் இணையதளங்கள் இன்று ஹேக் செய்யப்பட்டன.
அந்த இணையதளங்களை பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் ஹேக் செய்தனர். இணையதளத்தை ஹேக் செய்தது காஷ்மீரி சிறுத்தைகள் என்று அந்த பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய இணையதள பக்கத்தில் எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலைய இணையதளம் தற்போது நன்றாக செயல்படுகிறது.
பாகிஸ்தானிய ஹேக்கர்கள் இந்திய விமான நிலைய இணையதளங்களை ஹேக் செய்து இது புதிது அன்று.