Breaking News
குழந்தைகளுக்கு பாதுகாப்பான உலகம்: மோகன்லாலின் புதுவருட உறுதிமொழி..!

கடந்த சில தினங்களாக ‘ஐ சப்போர்ட் லாலேட்டன்’ என்கிற ஒன்றரை நிமிட குறும்படம் ஒன்று மலையாள ரசிகர்களிடையே சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மோகன்லாலே தோன்றி சில நொடிகள் பேசுகிறார் என்பதுதான் விசேஷம். அந்த வீடியோவில் மோகன்லால் பேசியுள்ள கருத்தும் கவனம் பெற்றுள்ளது.

‘குழந்தைகள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர வேண்டும். அதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். குழந்தைகள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை உட்பட பலவும் தடுத்து ஒழிக்கப்பட வேண்டும். அப்படி ஒரு ஆண்டாக வரும் ஆண்டு அமைய வேண்டும்” என்று தனது புத்தாண்டு விருப்பத்தை தெரிவித்துள்ளார் மோகன்லால். இந்த வீடியோவிலேயே ‘ஐ சப்போர்ட் லாலேட்டன்’ என பிரபல மலையாள நட்சத்திரங்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தும் உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.