மோடியை பின்பற்றும் மூன்று கண்டங்களில் உள்ள மூன்று நாடுகள்..!
ஆறு வாரங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாய்களைச் செல்லாது என்று அறிவித்தார். இப்போது இந்தியாவில் மட்டும் இது நடைபெறவில்லை, இன்னும் பிற நாடுகளிலும் நடைபெறுகின்றது.
உலக நாடுகளின் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்தியாவின் இந்த தைரியமான முயற்சியைக் கண்டு வியந்து வருகின்றனர்.
மோடியின் இந்த முயற்சியினால் எவ்வளவு கருப்புப்பணம் வெளிவரும் என்று தெரியவில்லை என்றாலும் பிற உலக நாடுகள் இதைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். இந்தியாவைப் பார்த்து அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைச் செல்லது என்று அன்மையில் அறிவித்த மூன்று நாடுகள் பற்றி இங்குப் பார்ப்போம்.
டிசம்பர் 14-ம் தேதி ஆஸ்திரேலியாவின் நிதி சேவைகள் மற்றும் வருவாய் துறை அமைச்சர் கொல்லி ஓ டயர் 100 டாலர் நோட்டுகளை அறிவிக்க இருப்பதாகக் கூறினார். ஆஸ்திரேலியாவில் 100 டாலர் நோட்டு தான் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு. இந்தியாவைப் போன்றே இங்கு அதிக மதிப்பு உடைய ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவித்து மாற்ற முயல்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவது வங்கி மற்றும் பொருளாதாரத்திற்கு நல்லது என்று யூபிஎஸ் ஆய்வாளர்கள் கடந்த மாதம் தெரிவித்தனர்.
டிசம்பர் 19-ம் தேதி பாகிஸ்தான் கருப்புப் பணத்தை வெளிகொண்டு வர 5000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
பாகிஸ்தானில் உள்ள ரூபாய் மதிப்பில் 30 சதவீத நோட்டுகள் 5000 ரூபாய் நோட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரூபாய் நோட்டுகளை வருகின்ற 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் மொத்தமாகத் திரும்பப்பெற பாகிஸ்தான் முயற்சியை எடுத்துள்ளது.
பண வீக்கம் 475 சதவீதமாக இருக்கும் என்று கூறப்படும் வெனிசுலாவில் டிசம்பர் 11-ம் தேதி முதல் 100 போல்பிர் பில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. 77 சதவீதம் ரூபாய் நோட்டுகள் 100 போல்பிர் பில்களாக புழக்கத்தில் உள்ளன. இதை மாற்ற முதல் 72 மணி நேரம் மட்டுமே அளிக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 2-ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்று வெனிசுலா அரசு அறிவித்துள்ளது.
மியான்மார், ஜிம்பாபேவ் போன்ற நாடுகளில் இது போன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையைப் பெற்றது.
மேலும் இந்தியாவைப் போன்று ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்த பல நாடுகள் தோல்வியை மட்டுமே சந்தித்து. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற சிக்கலால் நாட்டின் வளர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.