Breaking News
சென்னை உள்பட நாடு முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை உள்பட நாடு முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். .

வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக புகார்கள் வந்ததை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மும்பை, பெங்களூரு, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சாலிகிராமத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் சென்னையில் உள்ள பிரபல வணிக வளாக உரிமையாளர் இல்லத்தில் சோதனை நடந்து வருகிறது.

ரூபாய் நோட்டு ஒழிப்பை அடுத்து வருமான வரித்துறையினர், அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ நடத்திவரும் அதிரடி சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களும் சிக்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.