Breaking News
இளம் சிறாரின் சரியான வயது என்ன? மத்திய அரசு தெளிவுபடுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யாத்ரி நடத்தி வரும் தன்னார்வ அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–

பாலியல் தொல்லையில் இருந்து குழந்தையை பாதுகாக்கும் இந்திய நடைமுறை சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இளம் சிறார் என்று கூறப்பட்டு உள்ளது. அதே சமயம் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இளம் சிறார் என இருக்கிறது.

15 வயது பெண்ணை திருமணம் செய்த ஆண் ஒருவர், அந்த பெண்ணுடன் உடல் உறவு வைத்திருந்தாலும் அவர் குற்றமற்றவர் என இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் கூறுகிறது. இதனால் குழந்தை திருமணம் அதிக அளவில் இந்தியாவில் நடக்கிறது. எனவே இளம் சிறார் என அழைக்கப்படுபவரின் சரியான வயது என்ன? என்று மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் புதிய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தன்னுடைய உத்தரவில், இளம் சிறார் வயது என்ன? என்பதை மத்திய அரசு 4 மாதத்துக்குள் தெளிவுபடுத்த வேண்டும். இதில் திருப்தி இல்லாவிட்டால், கைலாஷ் சத்யாத்ரியின் தன்னார்வ அமைப்பு இதே அமர்வில் மீண்டும் முறையிடலாம் என தெரிவித்தார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.