மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் ‘மாநில திருத்தத்துக்கான’ அவசர சட்டம்- ஓபிஎஸ் சொன்னது என்
டெல்லி: மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தின் ‘மாநில திருத்தம்’ கொண்டு வந்து அதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பும் அடுத்து நடக்கப் போவதும்…
1960-ம் ஆண்டு மிருகவதை தடுப்பு சட்டம் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான பொதுப்பட்டியலில் இருக்கிறது.
தற்போது இந்த மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் மிருகவதை தடுப்புச் சட்டம் இருப்பதால் மாநிலங்களும் திருத்தங்களை முன்வைக்கலாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு இத்திருத்தத்தைக் கொண்டு வருகிறது.
தமிழக அரசு கொண்டு வரும் இத் திருத்தம் அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட உள்ளது.
இந்திய அரசியல் சாசனப்படி இந்த வரைவு அவசர சட்டம் முதலில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
மத்திய அரசு தம்முடைய பரிந்துரையுடன ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்.
அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்து உத்தரவு பிறப்பித்த பின்னர் அதன் அடிப்படையில் அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பிப்பார்.